தப்பிச்சென்றாரா ஷிரந்தி ராஜபக்ஷ!!
![]() |
சமகால அநுர அரசாங்கத்தை ஏமாற்றி விட்டு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தப்பிச் சென்றுள்ளதாக அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படுகிறது.
நாட்டில் இலகுவாக செய்யக் கூடிய கண் சத்திர சிசிச்சையை வெளிநாட்டில் செய்யப் போவதாக ஷிரந்தி ஏமாற்றி சென்றுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
திடீரென நாட்டை விட்டு வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச, பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த கடிதம் சில உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாட்டை விட்டு வெளியேறியுள்ள ஷிரந்தி ராஜபக்சவுக்காக சட்டத்தரணி ஒருவர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் விடயங்களை கையாண்டு வருகிறார்.
இந்நிலையில் கண் அறுவை சிகிச்சை என குறிப்பிடப்பட்டிருந்த போதும், இலங்கைக்கு வராமல் தப்பித்துக் கொள்வதற்கான பல நடவடிக்கைகளை, மகிந்தவுக்கு நெருக்கமான சட்ட வல்லுநுர்கள் மேற்கொண்ட வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, அர்ஜுன் மகேந்திரன் போன்று ஷிரந்தி ராஜபக்சவும் வெளிநாடுகளில் நீண்ட காலத்திற்கு தங்கியிருக்க வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை