தியாக தீபத்திற்கு அஞ்சலி!!

 



தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன.


இந்த நிகழ்வு இன்று(26.09.2026) தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு பிரித்தானியா ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை லண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான 10 Downing Street பகுதியில் அடையாள உணவு தவிர்ப்பு விழிப்புணர்வுப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பிரித்தானியக் கொடியைத் தமிழ் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் கலையரசி மணியரசன் ஏற்றி வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தமிழீழத் தேசியக் கொடியைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் செல்வாவினால் ஏற்றி வைக்கப்பட்டுள்ளதுடன், ஈகைச்சுடரை லெப்டினன்ட் கேணல் கோபியின் புதல்வி டிலானி ஏற்றி வைத்துள்ளார்.

அதன் பின்னர், அகவணக்கம் இடம்பெற்றதுடன், திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மகளிர் அணி சார்பில் ஷர்மி, வட பிராந்திய மாவீரர் பணிமனைப் பொறுப்பாளரும் லெப்டினன்ட் கேணல் மனோஜின் சகோதரருமான கமல் ஆகியோர் மலர் மாலைகளை அணிவித்துள்ளனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.