விராட் கோலியின் அறிவிப்பு!!




2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர்கள் கொண்ட உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரே, இந்திய அணிக்காகத் தான் விளையாடும் இறுதித் தொடராக அமையும் என அவ்வணியின் முன்னணித் துடுப்பாட்ட வீரரான விராட் கோலி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.


ஏற்கனவே இருபதுக்கு 20 மற்றும் தேர்வுப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள 37 வயதான விராட் கோலி, தற்போது 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வருகின்றார்.

இந்நிலையில், எதிர்வரும் 2027 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணிக்குக் கிண்ணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காகத் தனது முழுமையான பங்களிப்பை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமிபியா ஆகிய நாடுகளில் 2027 ஆம் ஆண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள இந்த உலகக் கிண்ணத் தொடரானது, விராட் கோலியின் 5ஆவது உலகக் கிண்ணத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.