சிக்கலில் நாமல்!!
சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' (Krrish) கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.
பிரபல இந்திய சொத்து அபிவிருத்தி நிறுவனமான 'கிரிஷ்' நிறுவனத்துடன் தொடர்புடைய நிதி மோசடி மற்றும் இலஞ்சம் பெற்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரிடம் இந்த விவகாரம் தொடர்பில் கடந்த வாரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு 70 மில்லியன் ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்காகவே இந்த வாக்குமூலம் பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


.jpeg
)





கருத்துகள் இல்லை