எமது நிலம் எமக்கு வேண்டும்!!

 



யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரிலுள்ள நீதிமன்றம், தபாலகம் ஆகியவற்றிலிருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என கோரி எதிர்வரும் 11/09/2026 அன்று இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டதற்கு ஆதரவு கோரி பருத்தித்துறை நகர பிதா விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையிலான பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள் பருத்தித்துறை நகரில் வர்த்தகர்கள், மற்றும் பொது மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.



யுத்தம் நிறைவடைந்தும் 16 ஆண்டுகள் கழிந்தும் இதுவரை பருத்தித்துறை பிரதான தபாலகம், மற்றும் பருத்தித்துறை நீதிமன்றம் ஆகியவற்றிற்கான  காணிகள் விடுவிக்கப்படாமையினாலேயே குறித்த மக்கள் போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.