தியாக தீபம் திலீபன் அண்ணனின் திருவுருவச் சிலையினைத் தூக்கி வைக்க உதவி செய்த அப்பாவித் தமிழ் இளைஞர்கள் மீது, காவல்துறையை ஏவி விசாரணை நடத்தி அச்சுறுத்தும் அனுர அரசாங்கத்தின் இழிசெயல் கடுமையான கண்டனத்திற்குரியது!


​அனுர அரசாங்கத்திடம் நாம் கேட்கும் நேரடி கேள்விகள்:

​கடந்த வருடம்: தியாக தீபம் திலீபன் அண்ணனின் திருவுருவச் சிலைக்கு NPP (தேசிய மக்கள் சக்தி) தரப்பில் இருந்து அமைச்சர்களும், எம்பி-க்களுமே நேரில் வந்து நினைவஞ்சலி செலுத்தினார்களே... அது...?


​இந்த வருடம்: யாழ் மாநகர சபையில் நடைபெற்ற திலீபன் அண்ணனின் நினைவேந்தல் நிகழ்வில், NPP-யின் முக்கியப் பிரதிநிதிகளான #கபிலன் உள்ளிட்ட அனைத்து எம்பி/உறுப்பினர்களும் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்களே... அது...?


​இன்று: அதிகாரத்தில் இருக்கும் NPP எம்பிக்களும் உறுப்பினர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்திய அதே தியாக தீபம் திலீபன் அண்ணனை... தமிழ் அப்பாவி மக்கள் வணங்குவதும், அவரது சிலையைப் பராமரித்து உயர்த்தி வைப்பதும் மட்டும் எப்படி குற்றமாகும்?


​இது என்ன மாதிரியான பொய் முகமும் பித்தலாட்டமும்?


​தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்துவது போல் நாடகமாடுவதும், மறுபுறம் அதே தியாகியை வணங்கும் சாதாரண தமிழ் மக்கள் மீது காவல்துறையை விட்டு விசாரணை நடத்தச் சொல்வதும் தான் உங்களின் "புதிய அரசியல் கலாச்சாரமா"?


​ஆயுதம் ஏந்திய தங்கள் சொந்த இயக்கத்தின் (JVP) கிளர்ச்சியாளர்களை தேசிய வீரர்களாகக் கொண்டாடும் இந்த அரசாங்கம், தமிழ் மக்களின் இதயங்களில் தியாகத்தின் திருவுருவமாக வீற்றிருக்கும் திலீபன் அண்ணனை வணங்குவதைக் குற்றமாக்க முயல்வது அப்பட்டமான பேரினவாதக் கண்மூடித்தனம்!


​அதிகாரத்தில் இருக்கும் போது ஒரு முகம், மக்களுக்கு ஒரு முகம் காட்டும் உங்களின் பித்தலாட்டம் அம்பலமாகிவிட்டது!


 காவல்துறையின் அச்சுறுத்தல்களுக்குத் தமிழ் மக்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை!





​#AnuraGovernment #NPP #DoubleStandard #ThiyagaDeepamThileepan #TamilNationalism #PoliticalHypocrisy #SriLankaPolitics

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.