மன்னார் வீதியில் விபத்து ஒருவர் மரணம் 11 பேர் காயம்!📸


 மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் ராணுவ வாகனம் விபத்தில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.


மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி கிளியன் குடியிருப்பு சந்தியில் இன்று சனிக்கிழமை (24) மாலை ராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகிய நிலையில் ராணுவ வீரர் ஒருவர் உயி*ரிழந்துள்ளதோடு 11 பேர் காயமடைந்துள்ளனர்.


தலைமன்னார் வீதியூடாக மன்னார் நோக்கி இன்று சனிக்கிழமை (24) மாலை இராணுவத்தினர் பயணம் செய்த டிபென்டர் ரக வாகனம் கீளியன் குடியிருப்பு பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில்,வீதி ஓரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.


இதன் போது குறித்த வாகனத்தில் பயணித்த 12 ராணுவ வீரர்களும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உடனடியாக பேசாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ராணுவ வீரர் ஒருவர் உயி*ரிழந்துள்ளார்.


காயமடைந்த ஏனைய 11 ராணுவ வீரர்களும் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


உயி*ரிழந்த மற்றும் காயமடைந்த ராணுவ வீரர்களை மன்னாரிற்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.