அனோஜன் விவகாரம் - வெளியான முக்கிய தகவல்!!

 



அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவுதி அரேபியாவின் உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. 


வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்டரீதியான முயற்சிகளின் விளைவாகவே இது சாத்தியமானது என அமைச்சர் தெரிவித்தார். 

அனோஜன் விவகாரத்தில் இந்த அறிவிப்பு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

இருப்பினும், அவரது தற்போதைய சட்ட நிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.