உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்பு!!

 



2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர (A/L) உயிரியல் அமைப்புகள் தொழில்நுட்ப (Bio Systems Technology) செய்முறை பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகளை பெறுவது தொடர்பில் இலங்கை பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது

இதுவரை அனுமதி அட்டைகளை பெறாத பரீட்சார்த்திகள் இன்று (ஒக்டோபர் 14) முதல் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரீட்சை 2026 ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 67 பரீட்சை நிலையங்களில் நடத்தப்படவுள்ளன.

அதன்படி, பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான (Private Candidates) அனுமதி அட்டைகள் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட்டிருந்த வீட்டு முகவரிகளுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எனவே  அனுமதி அட்டைகளைப் பெறாத பரீட்சார்த்திகள், பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு பின்வரும் வழிகளில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரத் தொலைபேசி எண்: 1911

தொலைபேசி எண்: 0112784208 / 0112784537

தொலைநகல் எண்: 0112784422

மின்னஞ்சல்: gcealexam@gmail.com


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.