உக்ரைனில் தாக்குதல் ஆரம்பம்!!

 



அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் ரஷ்யாவின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்த உக்ரைன், அத்தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளது.


இதனையடுத்து, தலைநகர் மொஸ்கோவிற்கு தெற்கே உள்ள ரியாசான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் பெருமளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

தமது நாட்டின் மின்சாரம் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்ததால், 3 நாட்களாக கடைப்பிடித்த கட்டுப்பாட்டை, தாம் முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

ரியாசான் பகுதியில் உக்ரைனின் 4 ஏவுகணைகள் மற்றும் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், எனினும் அவற்றின் இடிபாடுகள் வீழ்ந்து எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ரஷ்யா மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு உக்ரைனை வற்புறுத்துவதற்காக, ரஷ்ய வான்வழித் தாக்குதல்கள் குறித்த உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்வதை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியதாகவும், இராணுவ பயன்பாட்டிற்கான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வேகத்தைக் கட்டுப்படுத்தியதாகவும் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த "எரிசக்தி போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதித்த போதிலும், அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா 850க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்களை நடத்தி போர் நிறுத்தத்தை மீறியதாக உக்ரைன் சுட்டிக்காட்டியுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.