வெளிநாடொன்றில் இலங்கையரின் மோசமான செயல்!!
அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய இலங்கையர் ஒருவர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மெல்பேர்ன் நகரை சேர்ந்த கிரிக்கெட் பயிற்சியாளரும் இலங்கை ஏ அணியின் முன்னாள் வீரருமான 51 வயதுடைய சுரஞ்சித் சில்வா, பிராட்மெடோஸ் நீதவான் நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி சன்பரி பகுதியில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
எனினும் குற்றச்சாட்டை மறுத்த இலங்கையர் வழக்கை விசாரணைக்கு உட்படுத்துமாறு கோரிய போதிலும், சாட்சி விசாரணைகளின் பின்னர் நீதிமன்றம் அவரை குற்றவாளியாக அறிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் அவர் முகங்கொடுத்த தீவிர மன உளைச்சலை வெளிப்படுத்தியது.
தனது அனுமதியின்றி தனிப்பட்ட சுதந்திரத்திலும் உடலிலும் கைவைக்க யாருக்கும் உரிமையில்லை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இச்சம்பவத்திற்கு பின்னர் தான் தீவிரமான பாதுகாப்பற்ற தன்மைக்கும் மன பயத்திற்கும் ஆளானதாகக் குறிப்பிட்டார்.
மனிதர்களை நெருங்கி பழகும் போதே கடுமையான தயக்கம் ஏற்படும் அளவிற்கு இச்சம்பவம் தாக்கம் செலுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் தனது வாக்குமூலம் மூலம் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை