கொழும்பு மக்களுக்கு நெருக்கடி!!




 வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி போன்ற பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினுர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


சீனப் பிரஜைகளினால் இவ்வாறான ஓா் நெருக்கடி நிலையை இலங்கை வாழ் மக்கள் எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரம் என்ற ஒன்றை உருவாக்கியதன் பின்னர் சீனப் பிரஜைகளின் வருகை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி போன்ற பகுதிகளில் பெருமளவு பணம் கொடுத்து சீனப் பிரஜைகள் வீடுகளை வாடகைக்கு எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.


இதனால் உள்ளுர் மக்களினால் நியாயமான வாடகைக்கு வீடுகளை பெற முடியவில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபா வாடகைத் தொகையுடைய வீட்டை மூன்று லட்சம் ரூபா கொடுத்து சீனர்கள் வாங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் அந்தப் பகுதியில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களினால் சொத்துக்களை வாங்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே எதிர்காலத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் இன மக்களின் இருப்பினை உறுதி செய்யக்கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.