பொரளையில் இடம்பெற்ற மக்கள் போராட்டம்!!

 




அரசாங்கம் நாட்டு மக்களுக்கு மீது சுமத்தும் வரிச்சுமைக்கு எதிராக மக்கள் போராட்டம் இயக்கத்தினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இந்த போராட்டமானது, இன்று(03.10.2026) பொரளையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

கடந்தகால அரசாங்கத்துடன் ஒப்பிட்டு, பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம், தற்போது அதிகமான வரிச்சுமைக்கு இலங்கை மக்களை ஆளாகியுள்ளது. 

அத்துடன், பொதுக்கூட்டங்களில் நிவாரணம் வழங்குவதாக கூறிய அநுர அரசாங்கம், எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளது.

அநியாய வரிகளை நீக்கு...! வாழ்க்கைச் சுமையைக் குறைத்திடு! எனும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து, போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்தப் போராட்டத்தில், முன்னணி சோசலிசக் கட்சி, மக்கள் போராட்ட முன்னணி, சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம், தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் உள்ளிட்ட பல வெகுஜன அமைப்புகளும் சிவில் சமூகக் கூட்டமைப்புகளும் திரளாகப் பங்கேற்றிருந்தன.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.