வாகனங்கள் மாயம் - வெளியான அறிவிப்பு!!

 



போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான பல கோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் மாயமாகியுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.


தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாத்தறை - பெலியத்த புகையிரத திட்டத்திற்காக இறக்குமதி செய்யப்பட்ட 6 கேப் ரக வாகனங்களும் இதில் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த 6 வாகனங்களுக்கும் அமைச்சினால் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி வரியாக செலுத்தப்பட்டிருந்தது. எனினும் புகையிரத திட்டப் பணிகள் நிறைவடைந்த பின்னர் அவை அமைச்சிடம் ஒப்படைக்கப்படாமல் வேறு தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அனைத்து அரச வாகனங்களிலும் அரச இலச்சினை பொறிக்கப்பட வேண்டும். இருப்பினும், நெடுஞ்சாலைகள் பிரிவின் 40 வாகனங்களில் அரச இலச்சினை பொறிக்கப்பட்டிருக்கவில்லை என தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை அமைச்சுக்கு சொந்தமான 9 வாகனங்களின் உரிமை எவ்வித சட்டப்பூர்வ மாற்றங்களும் இன்றி வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளமையும் தணிக்கை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டில் நெடுஞ்சாலைகள் பிரிவின் 36 வாகனங்களில் எரிபொருள் திறன் பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.