கோட்டபாய மனு தாக்கல்!!




 தான் கைது செய்யப்படுதை தடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரிகத்த நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.


இந்த  மேன்முறையீட்டு மனுவில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்படுதை தடுக்கக் கோரி,  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ச மனுத் தாக்கல் செய்திருந்தார்.

எனினும், குறித்த மனுவை விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் நிராகரித்திருந்தது. 

இந்தநிலையில்,  மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ச  மேன்முறையீடு செய்துள்ளார். 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.