வெளிநாட்டு கற்கை நெறி - வெளியான அறிவிப்பு!!

இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு மையம் (Sri Lanka CERT) பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

அதன்படி சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கை விளம்பரங்களில் ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், இவ்வாறான போலி விளம்பரங்களை நம்பி ஏமாந்து, இலட்சக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சிலரிடமிருந்து தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இணைந்து கொள்வதன் மூலம் வெளிநாடுகளுக்கான விசா பெற முடியும் என்றும், சில ஆண்டுகள் பணிபுரிவதற்கான அனுமதியைப் பெற்றுப் பின்னர் குடியுரிமையைக் கூடப் பெற முடியும் என்றும் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் பகிரப்பட்டு வருவதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

இவற்றில் சில விளம்பரங்கள் முற்றிலும் மோசடியானவை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளும்போது கவர்ச்சிகரமான தகவல்கள் வழங்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அப்போது, தாங்கள் உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் என அந்த மோசடியாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

பதிவுக் கட்டணம் மற்றும் முதலாம் கல்வியாண்டிற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தி பல்கலைக்கழகத்தில் இணைய முடியும் என்றும், அதன் பின்னர் பகுதிநேர வேலை தேடிக் கொண்டு தங்குமிடம் மற்றும் உணவிற்கான செலவுகளைச் சமாளித்துக் கொள்ள முடியும் என்றும் அவர்கள் கவர்ச்சியாகக் கூறுகின்றனர்.

மேலும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளுக்குக் கல்வி உதவித்தொகை (Scholarship) கூடப் பெற முடியும் என்றும் அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றனர். இதனைத் தொடர்ந்து, மின்னஞ்சல் கோப்பு அல்லது வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் படங்கள், வீடியோக்கள் மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். கணினி அவசர கால பதிலளிப்பு மையம் (Sri Lanka CERT) பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

அதன்படி சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கை விளம்பரங்களில் ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், இவ்வாறான போலி விளம்பரங்களை நம்பி ஏமாந்து, இலட்சக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சிலரிடமிருந்து தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இணைந்து கொள்வதன் மூலம் வெளிநாடுகளுக்கான விசா பெற முடியும் என்றும், சில ஆண்டுகள் பணிபுரிவதற்கான அனுமதியைப் பெற்றுப் பின்னர் குடியுரிமையைக் கூடப் பெற முடியும் என்றும் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் பகிரப்பட்டு வருவதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

இவற்றில் சில விளம்பரங்கள் முற்றிலும் மோசடியானவை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளும்போது கவர்ச்சிகரமான தகவல்கள் வழங்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அப்போது, தாங்கள் உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் என அந்த மோசடியாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

பதிவுக் கட்டணம் மற்றும் முதலாம் கல்வியாண்டிற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தி பல்கலைக்கழகத்தில் இணைய முடியும் என்றும், அதன் பின்னர் பகுதிநேர வேலை தேடிக் கொண்டு தங்குமிடம் மற்றும் உணவிற்கான செலவுகளைச் சமாளித்துக் கொள்ள முடியும் என்றும் அவர்கள் கவர்ச்சியாகக் கூறுகின்றனர்.

மேலும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளுக்குக் கல்வி உதவித்தொகை (Scholarship) கூடப் பெற முடியும் என்றும் அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றனர். இதனைத் தொடர்ந்து, மின்னஞ்சல் கோப்பு அல்லது வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் படங்கள், வீடியோக்கள் மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.