மன்னார் விவசாயிகளுக்கான அறிவிப்பு!!
மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் விவசாயிகள் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு குறுகிய காலத்தில் பலன் தரக்கூடிய நெல்லை பயிரிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மன்னார் மாவட்ட விவசாய குழு கூட்டம் நேற்று (14) மாலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டது.
.மன்னார் மாவட்டத்தில் இந்த வருடம் , 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இக் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் விரிவாக ஆராயப்பட்டது.
கட்டுக்கரை குளம், ஏனைய மாகாண விவசாய குளம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களங்களுக்கு சொந்தமான குளங்களை அடிப்படையாகக் கொண்ட விவசாய நிலப்பரப்புகளில் இக்கால போகப் பயிர் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
காலபோக செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கமநல சேவைகள் திணைக்களத்தினால் ஒரு ஹெக்டேருக்கு 30 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் உர மானியம் வழங்கப்பட உள்ளது.எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, மன்னார் மாவட்ட விவசாயிகள் தங்கள் கமத்தொழில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டுக்கரை குளத்திற்கு ஏற்கனவே விவசாய இறுதி விதைப்பு திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏனைய இடங்களை பொறுத்தவரை, கமநல சேவைகள் திணைக்களத்தினால் ஒவ்வொரு குளங்கள் மற்றும் குளங்கள் சார்பாக வெவ்வேறு விவசாயக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளதற்கமைய, பயிற்சி செய்கை காலண்டர் அடிப்படையில் குறிப்பிட்ட திகதிக்கு முன்னதாக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை