பரந்தன் கிராம மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!!📸


இடைநிறுத்தப்பட்ட டித்வா வீட்டுத்திட்டத்திற்கான நிதியை வழங்குமாறு வலியுறுத்தி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் கிராம மக்கள் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


டித்வா வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகளை அமைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்று, ஆரம்பக் கட்ட நிதியும் வழங்கப்பட்ட நிலையில், மக்கள் தமது வீடமைப்புப் பணிகளை ஆரம்பித்திருந்தனர்.


எனினும், கிடைக்கபெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் வீட்டுத்திட்டத்திற்கான நிதி வழங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நிதிவிடுவிப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந் நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடமைப்புப் பணிகளை நிறைவு செய்வதற்கு ஏதுவாக, தமக்குரிய மிகுதி நிதியைத் தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.


இதன்போது, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.


மாவட்ட ஊடகப்பிரிவு

மாவட்டச்செயலகம்

கிளிநொச்சி.










கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.