டுபாய்க்கு தப்பிச் சென்ற கான்ஸ்டபிளை தூக்கி வந்த இலங்கை பொலிஸ் அதிகாரிகள்.!!


கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது, தனது கடமைக்கான T-56 ரக துப்பாக்கியைத் திருடி, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல் உறுப்பினர்களிடம் வழங்கிவிட்டு, பின்னர் டுபாய்க்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த ஜயக்கொடி ஆரச்சிகே கவிந்து என்பவர் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.


CID அதிகாரிகள் குழுவொன்றும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்றும் டுபாய்க்குச் சென்று அவரைக் கைது செய்ததன் பின்னரே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளார்.


குறித்த சந்தேகநபர் இன்று (26) காலை ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-226 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.








கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.