வடக்கு ஆளுநரின் சோப்பன சுந்தரி யாழ் வருகிறார்!
வடக்கில் உள்ளூராட்சி ஆணையாளராக இருந்து வெளி மாகாணம் சென்று ஆறு மாதங்கள் கூட ஆகாத தேவனந்தனி பாபுவை வடக்கு மாகாண சபைக்கு வருகிறார்.
ஆளுநர் வேதநாயகனின் விசுவாசியும் ஆஸ்தனான பெண்மணியாகவும் தேவநந்தினி இருப்பது வடக்கு நிர்வாக சேவை அனைவருக்கும் தெரிந்த விடயம்.
வடக்கு கல்வியை எவ்வாறு அழிக்கலாம்?
வட மாகாண கல்வியை அழிப்பதற்கு ஆளுநர் வேதநாயகன் தெற்கு நிகழ்ச்சி நிரலில் செயல்பாட்டு வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
ஆசிரியவிட மாற்றங்களை தான்றோன்றித்தனமாக செய்வதும் நீதிபதிகளுக்கு அழுத்தம் வழங்கி இடமாற்றங்களை வழங்கச் செய்வதும் இவருடைய செயற்பாடு அல்ல தெற்கின் நிகழ்ச்சி நிரலை கச்சிதமாக செய்து வருகிறார்.
அதன் ஒரு தொடர்ச்சியாக தேவநந்தினி பாபுவை கல்வி அமைச்சின் செயலாளராக நியமித்து வடக்கு கல்வியை சீரழிக்க திரை மறைவில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறிய கிடைத்துள்ளது.
தற்போதைய கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சனை முல்லைத்தீவு அரசாங்க அதிபராக செல்வதை விரும்பாத ஆளுநர் தனது விசுவாசியான சோதி நாதனை நியமிக்க வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறார்.
சுகாதார அமைச்சுக்கு பற்றிக்கை மாற்ற திட்டம்!
தேவநந்தினிக்கு கல்வி அமைச்சை வழங்கி பற்றிக் நிரஞ்சனக்கு சுகாதார அமைச்சை வழங்கி தன்னை எதிர்க்கும் வைத்தியர்களின் சண்டித்தனத்துக்கு முடிவு கட்டுவதற்கு ஆளுநர் திட்டம் வகுத்துள்ளார்.
ஏனெனில் தற்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய சங்கங்களுடன் நல்ல உறவில் இருப்பதை விரும்பாத ஆளுநர் வேதநாயகன் தனது அரசியல் செயற்பாடுகளுக்கு செயலாளர் ஒத்து வர மாட்டார் என்பதை மேல்மட்டங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அவரை மாற்றி மகளிர் விவகார அமைச்சை வழங்குவதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
ஆக மொத்தத்தில் வடக்கு மாகாணத்தை செயற்பாடற்ற ஒரு மாகாணமாக்குவதற்கு ஆளுநர் தன்னாலான பணியை கச்சிதமாக செய்து வருகிறார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை