கண்ணீரால் நனைந்தது பருத்தித்துறை நகர்!மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி!📸

 











































பருத்தித்துறை நகரில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் போது மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியமை உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது.


பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் நகரின் மத்தியில் பந்தல் அமைக்கப்பட்டு சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு கடந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.


இந்நிலையில் மாவீரர் நாளின் பிரதனா நிகழ்வு நேற்றைய தினம மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.


மாலை 6.05 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து சரியாக 6.07 மணிக்கு மாவீரர்களான கப்டன் பராசக்தி, 2 ஆம் லெப்டினண்ட் சுடர், நாகதீபன் ஆகியோரின் தாயார் கந்தசாமி புனிதவதி அவர்கள் மாவீரர் நினைவு பொதுச்சுடரினை ஏற்றிவைக்க சம நேரத்தில் ஈகைச் சுடர்களும் ஏற்றப்பட்டன.


கல்லறைப் பாடல் ஒலிக்கவிடப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் என பலரும் கண்ணீர்மல்க மாவீரர்களை நினைவில் ஏந்தி அஞ்சலி செலுத்தியமை மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது.


தொடர்ந்து மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.


இதன்போது மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர், பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல், உப நகரபிதா தே.தேவராஜேந்திரன், நகரசபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.


#வடமராட்சி #பருத்தித்துறை #நவம்பர்27 #மாவீரர்நாள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.