இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!!
இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய இழுவை மீன்பிடி படகு ஒன்றுடன் 07 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று(01.11.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து தலைமன்னாருக்கு வடக்கே கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய கடற்றொழிலாளர்கள் 07 பேர் படகு ஒன்றுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடிப்படகு மற்றும் கடற்றொழிலாளர்கள் தலைமன்னார் இறங்குதுறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடற்றொழிலாளர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை