சத்தாரதன தேரர் அதிரடியாகக் கைது!!

 



அநுராதபுரம் ருவன்வெலிசாய மகா விகாரைக்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, ராஜாங்கனை சத்தாரதன தேரர் அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை ராஜாங்கனை சத்தாரதன தேரர் உள்ளிட்ட மற்றுமொருவரிடம் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.


குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு சந்தேகநபர்களுக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று அநுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மோதல் சம்பவத்தைத் தூண்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ராஜாங்கனை சத்தாரதன தேரர் உள்ளிட்ட 25 இற்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்து, குறித்த நபர்களைக் கைது செய்யத் தவறியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு அநுராதபுரம் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது

அத்துடன், எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

அநுராதபுரம் பிரதான நீதவான் சியாபத் சசிந்து விக்ரமரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார். மேலும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழு சந்தேகநபர்களுக்கும் பிணை வழங்கக் கோரிய மனுவையும் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.