குகையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமிக்கு அரசாங்கம் உதவி!!
நக்கிள்ஸ் பகுதியில் குகைக்குள் இருந்து மீட்கப்பட்ட 15 வயது சிறுமி மற்றும் கைக்குழந்தையின் நலன் மற்றும் கல்வி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ‘அர்த்த’ (Artha) திட்டத்தின் கீழ் மாதாந்த நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த சிறுவர்களின் நலத்தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், அவர்களின் கல்வி மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள் தடையின்றித் தொடர்வதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த உதவி வழங்கப்படவுள்ளது.
15 வயதுடைய சிறுமி தற்போது க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு விண்ணப்பித்துள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்டு, பரீட்சைக்குத் தயாராகும் சிறுமிக்கு உதவும் வகையில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினூடாக உளவியல் மற்றும் சமூக ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

.jpeg
)





கருத்துகள் இல்லை