தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவும் அஞ்சலியும்!!

 



மட்டக்களப்பில் மாவீரர் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணியை முன்னெடுத்துள்ளனர்.



இப்பணி நேற்று(01.11.2026) ஆரம்பித்துவைக்கப்பட்ட நிலையில், மாவீர்களின் கல்லறைக்கு கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தல் இடம்பெறவுள்ள நிலையில் நவம்பர் மாதம் மாவீரர் மாதமாக அறிவித்து அதன் ஆரம்ப நாளான முதலாம் திகதியை முன்னிட்டு நேற்று மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.