ஜனாதிபதியின் உரை தொடர்பில் சர்ச்சை!!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு உரைகளை யார் எழுதிக் கொடுக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி வரி தொடர்பில் அண்மையில் ஆற்றிய உரை பொய்யானது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம், மக்கள் மீது கடுமையான வரிகளை விதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிதாக எந்த வரியும் அறவிடப்படவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார் எனவும், தாம் நிதி குழுவின் தலைவர் என்ற வகையில் அரசாங்கம் எவ்வாறு வரி விதிக்கின்றது என்பது தமக்கு நன்றாக தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் எவ்வளவு வரி விதித்தது என்பது தமக்கு நன்றாக தெரியும் எனவும் இல்லாத புதிய வரிகளையும் விதித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக டிஜிட்டல் சேவைகளுக்கான வரியை இந்த அரசாங்கமே அறிமுகம் செய்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலத்திரனியல் வாகனங்களுக்கான வரிகள் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு இந்த உரைகளை யார் எழுதிக் கொடுக்கின்றார்கள் என்பது தமக்குப் புரியவில்லை என கலாநிதி ஹர்ஷ டி சில்வா வருத்தம் தெரிவித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை