அமெரிக்க தூதரகம் 3 நாட்கள் பூட்டு!!

 



இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எதிர்வரும் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் இதனை அறிவித்துள்ளது.


அமெரிக்காவின் தேசிய விடுமுறையான தாங்க்ஸ்கிவிங் (Thanksgiving) தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

எனவே தூதரகத்தின் வழக்கமான சேவைகள் மற்றும் அலுவலக நடவடிக்கைகள் குறித்த இரு தினங்களிலும் இடம்பெறாது என தெரிவித்துள்ளது.

இதேவேளை, நவம்பர் 30-ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தூதரகத்தின் பணிகள் மீண்டும் வழமைபோல் ஆரம்பமாகும் என அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.