நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயல்¡

 



பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆடம்பர வாழ்க்கையை வாழ தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பதுளையை விட்டு வெளியேறி கொழும்பிற்கு குடியேறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பில் வீடுகளை வாங்கி அங்கு குடியேறி, தனது பிள்ளைகளை கொழும்பில் உள்ள பாடசாலைகளில் சேர்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


வரவு செலவு திட்ட குழு விவாதத்தில் பங்கேற்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

மாவட்ட மக்களின் பிரதிநிதியாக பதவியேற்ற பிறகு, தனது மாவட்டத்திலிருந்து வெளியேறி ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ முயன்றதற்காக ஆளும் கட்சியிடமிருந்து கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், அப்பகுதியின் உண்மையான பிரச்சினைகளைப் புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களை மறந்து ஆடம்பர வாழ்க்கையை வாழ தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பதுளையை விட்டு வெளியேறி கொழும்பிற்கு குடியேறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.