வர்த்தகருக்கு எதிராக மோசடி!!
கொழும்பில் வர்த்தகர் ஒருவருக்கு 47.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணம் இல்லாத காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக நபருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 வழக்குகளில் குற்றவாளியாக காணப்பட்ட அக்குபஞ்சர் சிகிச்சையாளர் பிரசாத் தேசப்பிரிய என்பவருக்கு 4.76 மில்லியன் ரூபா அபராதமும், 8 லட்சம் ரூபா நஷ்டஈடும் செலுத்துமாறு நுகேகொட மேலதிக நீதவான் சஞ்சய லக்மால் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, 4 வழக்குகளுக்கும் தொடர்புடையதாக 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத மற்றும் 3 மாத சிறைத்தண்டனைகளும் விதிக்கப்பட்டுள்ளன
பணம் இல்லாத காசோலைகளை வழங்கி மோசடி செய்தமை தொடர்பான இரண்டு வழக்குகளில் பிரதிவாதியான பிரசாத் தேசப்பிரிய நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
76 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் இல்லாத காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஏனைய 2 வழக்குகளில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார்.
இலக்கம் 14, கிரகரி வீதி, கொழும்பு 07 மற்றும் களுபோவில மருத்துவ சிகிச்சை நிலையம், இலக்கம் 144, துட்டுகைமுனு மாவத்தை, களுபோவில ஆகிய முகவரிகளில் வசிக்கும் பிரதிவாதியான பிரசாத் என்பவர், நுகேகொட பகுதியை சேர்ந்த வர்த்தகரான சுதர்சன மங்கள என்பவருக்கு இவ்வாறு பணம் இல்லாத காசோலைகளை வழங்கி மோசடி செய்திருந்தார்.
நஷ்டஈட்டுத் தொகையை செலுத்துவது தொடர்பில் வழக்கை பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதியும், அபராதத் தொகையை செலுத்துவது தொடர்பில் மே மாதம் 11 ஆம் திகதியும் மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஜீவந்த ஜயதிலக்கவுடன் சட்டத்தரணி திலங்க பொல்கம்பொல ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை