தை மாதத்தை தமிழ் மரபு மாதமாக்கி பிரகடனம்!!

 



திருகோணமலை மாநகர சபையில் தை மாதத்தை தமிழ் மரபு மாதமாக அங்கீகரிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.


கடந்த(19) ஆம் திகதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தினை பலரும் வரவேற்றுள்ளனர்.

இந்த நடைமுறை புலம்பெயர் நாடுகளில் ஏற்கனவே உள்ளதுடன், கனடாவில் ஒன்ராறியோ மாகாணம் 2014 ஆண்டு சட்டம் இயற்றி ஜனவரியை தமிழ் மரபு மாதமாக்கியுள்ளது.

இதனையடுத்து 2016 இல் கனேடிய நாடாளுமன்றமும் ஒரு மனதாக அதை ஏற்றுக்கொண்டுள்ளது.

பிரித்தானியாவில் 2021 டிசம்பரில் லண்டன் மாநகர சபை அதே தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

தற்போது இந்த முயற்சியை திருகோணமலை மாநகர சபை மேற்கொண்டுள்ளமை பாராட்டினை பெற்றுள்ளது. 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.