புதுமாப்பிள்ளை நீரில் மூழ்கி மரணம்!!

 



மாத்தறை - தெனியாயாய பிரதேசத்தில் நீரூற்றுப் பகுதியில் நீராடச் சென்றபோது, நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த நால்வரில் ஒருவர் கடந்த 17 நாட்களுக்கு முன்னரே திருமண பந்தத்தில் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


உயிரிழந்தவர் களனிப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று, கொழும்பின் முன்னணி தனியார் நிறுவனம் ஒன்றில் கணினிப் பொறியியலாளராக பணியாற்றிய 34 வயது பிஷான் பிரபாத்வர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் கடந்த மாதம் 21ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்த நிலையில் 17 நாட்களில் இந்த துயர சம்பவம் பதிவாகி உ்ள்ளது.

நேற்று முன்தினம் 7 பேர் கொண்ட குழுவினர் நுகேகொட பிரதேசத்திலிருந்து தெனியாய, பெவரலிய பிரதேசத்திற்குச் சுற்றுலாப்பயணம் சென்றுள்ளனர்.

அங்குள்ள நீரூற்றுப் பகுதியில் நீராடச் சென்றபோது, மேல் பகுதியில் பெய்த திடீர் மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளார்.

பிஷான் பிரபாத்வர உள்ளிட்ட நான்கு இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

ஏனைய இருவர் பாறைகளுக்கு இடையில் சிக்கிக் காயங்களுடன் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் காணாமல் போன நால்வரும் நேற்று மாலை சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.