ஞானசார தேரருக்கு நான்கு ஆண்டுகள் சிறை!!
இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து விடுவித்து, குற்றச்சாட்டுகளிலிருந்து நிரபராதியாக விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கொழும்பு கிருலப்பனை பகுதியில் அமைந்துள்ள கூரகல விகாரை தொடர்பாக 2016ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்த கருத்துக்கள் ஊடாக இஸ்லாம் மதத்தை அவமதித்ததுடன், இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்திற்குத் தடையாகச் செயற்பட்டதாகவும் இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 291ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு 2024ஆம் ஆண்டு கொழும்பு உயர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்திருந்தது.
இதனை எதிர்த்தே அவர் மேன்முறையீடு செய்திருந்த நிலையில், தற்போது அந்த மனு நிராகரிக்கப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை