அவுஸ்ரேலிய அணியில் குழப்பம்!!
2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற பந்தை சேதப்படுத்திய சர்ச்சை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
அப்போது மணல் தாளுடன் (Sandpaper) பிடிபட்ட அவுஸ்திரேலிய வீரர் கெமரூன் பான்கிராஃப்ட், எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பந்தை சேதப்படுத்தும் திட்டம் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர் மற்றும் தன்னுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. முழு அணிக்கும் அது தெரிந்திருந்ததாக பான்கிராஃப்ட் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் விசாரணையின்போது முக்கியமான தகவல்களை மறைத்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அப்போதைய பயிற்றுவிப்பாளர் டேவிட் சேக்கர் உள்ளிட்ட வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்புக் குழுவினர் இந்தச் செயலுக்கு ஊக்கமளித்ததாகவும், அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஊடக முகாமையாளர் கேட் ஹட்சிசன் மட்டுமே இந்தச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்துக்குப் பின்னர் மணல் தாளை அகற்றுமாறு பயிற்றுவிப்பாளர் டரன் லீமன், பீட்டர் ஹேண்ட்ஸ்கொம்ப் மூலம் தனக்குத் தகவல் அனுப்பியதாகவும் பான்கிராஃப்ட் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அணியின் அனைவருக்கும் இந்த விவகாரம் தெரிந்திருந்தது என்ற உஸ்மான் கவாஜாவின் கருத்தை, மறுத்திருந்தார்.
அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் இதனால் ஆத்திரமடைந்ததாகக் கூறிய பான்கிராஃப்ட், கம்மின்ஸின் அண்மைய ஊடகவியலாளர் சந்திப்பே தனது உண்மைகளை வெளிப்படுத்தத் தூண்டியதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், கம்மின்ஸ் தரப்பு பான்கிராஃப்டின் புதிய அறிக்கையில் ஏற்கனவே பதிலளிக்கப்படாத எந்த விடயமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் அவுஸ்திரேலியாவும் சம்பவம் தொடர்பான பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிய விசாரணை மன்றமொன்றை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவத்துக்காக ஸ்மித் மற்றும் வோர்னருக்கு தலா ஓராண்டு தடையும், பான்கிராஃப்டுக்கு ஒன்பது மாதத் தடையும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை