இலங்கை மருத்துவரின் சாதனை!!

 



இலங்கையில் உள்ள கராபிட்டிய போதனா மருத்துவமனையில் இரத்த நாளம் மற்றும் அவயவ மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவராகச் சேவை செய்யும் டாக்டர் ரஞ்சுக்க அவர்களின் அசாத்தியமான மருத்துவச் சேவையும் மனிதநேயமும் அனைவராலும் போற்றத்தக்கதாகும். விபத்து ஒன்றில் படுகாயமடைந்து கராபிட்டிய மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட எட்டு வயது சிறுமி ஒருவரின் கால்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று முந்தைய கட்டத்தில் மருத்துவர்களால் தீர்மானிக்கப்பட்டிருந்தது. 



இருப்பினும், இந்தச் இக்கட்டான சூழலில் தலையிட்ட டாக்டர் ரஞ்சுக்க கால்களை அகற்றத் தேவையில்லை நானே இவரின் கால்களைப் பாதுகாத்து குணப்படுத்தி, சாதாரண வாழ்க்கையை மீட்டுத் தருவேன் என்று உறுதியளித்து அந்தச் சிறுமியின் கால்களைக் காப்பாற்றி வியக்கத்தக்க வகையில் சாதனை படைத்துள்ளார்.


இது போன்ற தனித்துவமான சாதனைகள் மட்டுமின்றி, கராபிட்டிய மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்காக 150-க்கும் மேற்பட்ட வெற்றிகரமான அறுவை சிகிச்சைகளையும் இவர் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, சில சிக்கலான அறுவை சிகிச்சைகள் 5 முதல் 6 மணி நேரங்களுக்கும் மேல் நீண்டுகொண்ட செல்லும் சவாலான சூழ்நிலைகளிலும் தனது பொறுமையாலும் நிபுணத்துவத்தாலும் அவற்றை வெற்றிகரமாக முடித்துள்ளார். 


நமது நாட்டில் இது போன்ற அர்ப்பணிப்புள்ள மருத்துவர்கள் இருப்பது பெருமைக்குரியது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.