நாயின் வியப்பான செயல்!!

 



இலங்கையின் ஹெம்மாத்தகம, மெதிலிய பகுதியில் அமைந்துள்ள புராதன விகாரையில் வசிக்கும் நாய் ஒன்று, தனது வியக்கத்தக்க பழக்கவழக்கங்களால் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


சுமார் ஆறு வயதுடைய இந்த நாய், 'ரெக்ஸ்' என்றும் 'சூட்டி புதா' (செல்ல மகன்) என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறது.

விகாராதிபதியும் ஓய்வுபெற்ற அதிபருமான இலுக்கொட ஞானானந்த தேரரால் சிறுவயது முதல் வளர்க்கப்பட்டு வரும் ரெக்ஸ், விகாரையின் அன்றாட சமய நடவடிக்கைகளில் தனக்கென ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

குறிப்பாக, தினமும் தர்ம போதனை ஆரம்பமாவதற்கு முன்னர், பக்தர்கள் முன்னிலையில் சென்று விகாரை மணியை ஒலிப்பது அதன் வழக்கமாக உள்ளது.

தேரர் மணியடிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தும் வரை தொடர்ந்து மணியடிப்பது ரெக்ஸின் வியக்கத்தக்க செயலாகக் கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.