இலங்கை இளைஞர் இருவர் தென்கொரியாவில் மரணம்!!




 தென் கொரியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இரண்டு இலங்கையர்களின் விபரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


சியோலில் உள்ள இலங்கைத் தூதரகம் இவர்களை அடையாளம் கண்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், உடல்களை விரைவில் இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் கொடகவேல, ரன்வல பகுதியைச் சேர்ந்த 39 வயதான தெஹிபிட்டிய விதானலாகே அனில் குமார விஜேரத்ன மற்றும் வலப்பனை, ஹல்கிரன்ஓயா பகுதியைச் சேர்ந்த 31 வயதான மகேஸ்வரன் பிரசாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறித்து ஹ்வாசோங் சியோபு (Hwaseong Seobu) பொலிஸ் நிலையம் நேற்று (27) இலங்கைத் தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜாஙன் - மியோன் (Jangan-myeon) பகுதியில் முன்தினம் (26) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.