தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சேவை!!
மேற்கு மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேற்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (18) நள்ளிரவு முதல் நவம்பர் 23 ஆம் திகதி நள்ளிரவு வரை வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட காலகட்டத்தில் அனுமதி பத்திரங்களை பெற திட்டமிடப்பட்டிருந்த அனைத்து வாகனங்களும் நவம்பர் 25 முதல் 27 வரை அபராதம் இன்றி உரிமங்களைப் பெறலாம் என்று அத்துறை கூறியுள்ளது.
www.motortraffic.wp.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக ஒன்லைன் முறையில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் சேவையும் இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேற்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் துறையின் மின்னணு அமைப்பில் தொழில்நுட்ப மேம்படுத்தல் பணிகள் நடைபெறுவதால், குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை