வலுவடையும் சூறாவளி!!
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள "அக்வான்" (Akvan) சூறாவளியானது, இன்று (18) அதிகாலை தீவிர சூறாவளியாக மேலும் வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
"அக்வான்" (Akvan) சூறாவளியானது, இன்று (18) அதிகாலை 2.30 அயளவில் வட அகலாங்கு 12.6° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.6° இற்கு அருகில், திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 650 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
இந்தத் தொகுதியானது மேலும் மெதுவாக வடமேற்கு திசையில் நகர்ந்து, மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் “வலுவான சூறாவளியாக” மேலும் தீவிரமடையக்கூடிய அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இத்தொகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (19) பி.ப 05.30 அளவில் ‘’கடுமையான புயலாக” மேலும் தீவிரமடையும் என்பதுடன், நாளை மறுதினம் (20)கடுமையான புயலாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கடற்கரை ஊடாக இந்தியாவுக்குள் நுழையக்கூடும்.
எனவே, வடக்கு அகலாங்கு 06 முதல் 19 வரையிலும், கிழக்கு நெட்டாங்கு 80 முதல் 95 வரையிலும் உள்ள கடல் பகுதிகளிலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளிலும் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இக்கடல் பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை