இலங்கை அணிக்கு அபராதம்!!
இங்கிலாந்துக்கு எதிராக லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான் ஒருநாள் முத்தரப்புத் தொடரின் போட்டியில், மெதுவாக ஓவர்களை வீசியதற்காக இலங்கை அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் இலங்கை அணி ஒரு ஓவர் குறைவாக வீசியதாக போட்டி நடுவர் ஜெஃப் க்ரோவ் அறிவித்துள்ளார்.
இலங்கை அணித்தலைவர் குசல் மெண்டிஸ் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதால், மேலதிக விசாரணையின்றி அபராதம் விதிக்கப்பட்டது.
ஐசிசி விதிமுறைகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் வீசத் தவறும் ஒவ்வொரு ஓவருக்கும் வீரர்களின் போட்டிக் கட்டணத்தில் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை