அரசை சாடும் சஜித் பிரேமதாச!!

 



தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தோல்வியடைந்துள்ள அரசு, தனது இயலாமையை மறைத்து ஆட்சியை வலுக்கட்டாயமாகத் தக்கவைத்துக்கொள்ள அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவரத் தயாராகி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.


பொலன்னறுவையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,

"தற்போதைய அரசின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், மக்களின் பேச்சுச் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் கருத்துத் தெரிவிக்கும் ஜனநாயகச் சுதந்திரம் என்பவற்றைக் கட்டுப்படுத்த அரசு இரு புதிய சட்டங்களைக் கொண்டுவர முற்படுகின்றது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.