ஆசிரியர் நேர்முகதேர்வு விபரங்கள் வெளியானது!!
இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-I (அ) பதவிக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வு விபரங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களிலான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அனைத்து மாகாணங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் நேர்முகத் தேர்வு திகதி, நேரம், இடம் மற்றும் நேர்முகத் தேர்வுக் குழு இலக்கம் ஆகிய விபரங்கள் கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கான அறிவுறுத்தல் தாள்கள் (G3, G4) மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்கள் (F2, F3, F4, F5) ஆகியனவும் வெளியிடப்பட்டுள்ளன.
நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் நவம்பர் 2ஆம் திகதி முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட முகவரிகளுக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
எனவே, விண்ணப்பதாரர்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விபரங்களைச் சரிபார்த்து, உரிய ஆவணங்களுடன் குறிப்பிட்ட திகதி மற்றும் நேரத்தில் நேர்முகத் தேர்வில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை