தொழிலாளர் தின நிகழ்வுகள் எதிர்வரும் மே மாதம் 07 ம் திகதி!

சர்வதேச தொழிலாளர் தினமான மே மாதம் 01ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள தொழிலாளர் தின நிகழ்வுகள் எதிர்வரும் மே மாதம் 07 ம் திகதிக்கு பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

பௌத்த மதத்தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று அமைச்சரவை அனுமதியும் வழங்ககப்பட்டுள்ளது. 

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 மற்றும் 30ம் திகதிகள் வெசாக் போயா தினமாக அமைந்துள்ளதால், தொடர்ந்து வரும் வாரம் வெசாக் வாரமாக இலங்கையில் அனுஷ்டிக்கப்படுவது வழமை. 

அதன்படி பௌத்த மதத்தலைவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மே மாதம் 01ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள தொழிலாளர் தின நிகழ்வுகளை மே மாதம் 7 ம் திகதிக்கு பிற்போட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Powered by Blogger.