புத்தாண்டை முன்னிட்டு மேலதிகமாக 2000 பஸ்கள் சேவையில்!

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதி கருதி, இலங்கை போக்குவரத்துச் சபை மேலதிகமாக இரண்டாயிரம் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த உள்ளது. 

இதற்கு தேவையான மேலதிக பஸ்கள், நுவரெலியா, கண்டி, பதுளை உள்ளிட்ட பிரதேச அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவிக்கையில், எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையில் இந்த பஸ் சேவைகள் இடம்பெறும். கொழும்பு புறக்கோட்டை மத்திய பஸ்தரிப்பு நிலையம், மற்றும் பிரதேச அலுவலகங்களில் முன்னெடுக்கப்படும் என்றார். 

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு உட்பட்ட 103 டிப்போக்களை உள்ளடக்கிய வகையில், இந்த விசேட பஸ்சேவைகள் இடம்பெறும். நிறுவன வலயத்திற்கு அருகாமையில் இந்த பஸ் சேவை முன்னெடுக்கப்படும் என்று பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்திரசிறி குறிப்பிட்டார்.
Powered by Blogger.