தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் பரிசோதகர் பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளியில் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 

வியாழக்கிழமை இரவு மைலம்பாவெளியில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபட்டுவிட்டு வந்துகொண்டிருந்தபோது தாக்குதலுக்குள்ளான பொலிஸ் பரிசோதகரும் குடும்பத்தினரும் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அங்கு மதுபோதையில் வந்த மூவர் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் அங்கிருந்த பெண்னொருவரின் கைப்பையையும் பறித்துச்செல்ல முற்பட்டுள்ளனர். 

இதன்போது குறித்த மூவருக்கும் பொலிஸ் பிரிசோதகருக்கும் இடையே மோதல் நடைபெற்றுதுடன் இதன்போது மூவரினாலும் பொலிஸ் பரிசோதகர் கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார். 

படுகாயமடைந்த பொலிஸ் பரிசோதகர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர் சாவகச்சேரி பொலிஸ் பரிசோதகர் ஹேரத் எனவும் இது தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 

மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். 
Powered by Blogger.