தந்தை செல்வாவின் 20வது பிறந்த தினம் அனுஷ்டிப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் நிறுவக தலைவரும் அரசியல் மூதறிஞருமான தந்தை செல்வாவின் 120வது பிறந்த தினம் இன்று நினைவு கூறப்பட்டது. 

யாழ் நகரில் செல்வா சதுக்கத்திலுள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அத்துடன் தந்தை செல்வநாயகத்தின் சமாதியிலும் அரசியல் பிரமுகர்களினால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், வடமாகாண அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

இதேவேளை தந்தை செல்வாவின் பிறந்த தினம் மன்னார் நகர மத்தியில் உள்ள அன்னாரது சிலையடியிலும் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் நினைவு கூறப்பட்டது. 
Powered by Blogger.