3வது திருமணத்துக்கு தயாராகும் விஜய் மல்லையா!

இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார்.
62 வயதாகும் விஜய் மல்லையா மூன்றாவது முறையாக பிங்கி லால்வானி என்ற இளம் ஏர்ஹோஸ்ட்ரஸை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிங்கி லால்வானி விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங் பிஷர் ஏர்லைன்ஸில் ஏர் ஹோஸ்ட்ரஸாக இருந்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில், ஏர் ஹோஸ்ட்ரஸ் வேலையில் இணைந்தபோது, விஜய் மல்லையா பிங்கியைச் சந்தித்துள்ளார். அன்றிலிருந்து இருவரும் ஒன்றாகவே இருந்து வருகின்றனர். லண்டனில் வழக்கு விசாரணையின்போதும் பிங்கி விஜய் மல்லையா உடனே இருந்தார்.
விஜய் மல்லையா இதற்கு முன்பாக ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.