கோட்டாபாய நீதிமன்றம் செல்வதற்கு பயப்படுகிறார்!

ஊழல் அதிகமாக நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இலங்​கை நான்காவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச நீதிமன்றங்கள் செல்வதற்கு பயப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மல்வானையில் அமைக்கப்பட்ட சொகுசு வீடு மற்றும் தாஜுதின் கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய குற்றச்செயல்களில் ஈடுப்பட்டவர்கள் தொடர்பில் ஆதாரங்கள் இருந்தும் அவர்கள் இதுவரையில் தண்டிக்கப்படாமல் இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான குற்றவாளிகளை,நீதித்துறை, வழக்கறிஞர்கள்,சட்டம் மற்றும் மக்களே பாதுகாக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.