இனப்படுகொலை குற்றங்களை விசாரிக் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும் என ஜநாவில் வலியுறுத்தல்.!

இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்க மாற்றுவழிகளை தேடவேண்டும் என ஜெனீவா மனிதவுரிமைகள் மாநாட்டில் பேரவை.ஆணையாளர் கூறிய கருத்துக்களை வரவேற்றார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
. மேலும் அக்குற்றங்களை விசாரிக் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும் எனவும் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

இலங்கையில் பொறுப்புக் கூறலை மேம்படுத்துவதற்காக வேறு மாற்று வழிகளை நாட வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத் தரப்பு எடுத்துள்ள நிலைப்பாட்டை வலிமையாக வரவேற்கின்றோம்.’’ அதேசமயம், இலங்கை விடயத்தில் குற்றவியல் பொறுப்புக் கூறலை உண்மையாக நிலைநிறுத்துவதற்காக அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் அல்லது அதற்கான விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அமைத்து, அதனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை மீளவும் வலியு றுத்துகின்றோம்.’’ இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலை வர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று ஐ.நா. மனித உரி மைகள் கவுன்ஸிலில் இலங்கை விடயம் ஆராயப்பட்ட போது அங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டார். ‘‘இலங்கையில் யுத்தத்தின் போது மிக மோசமாக மீறப்பட்ட மனித உரிமைகள் மற்றும் சர் வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை நியாயப்படுத்தியே அதனடிப்படையிலேயே இலங்கை தொடர்பான இந்த விசேட தீர்மானம் இங்கு நிறை வேற்றப்பட்டது. நல்லிணக்கம் ஏற்படுவதற்கு மிக அவசியமான நிலைமாறு கால நீதியும், கிரிமினல் குற்றப் பொறுப்புக் கூறலும் இலங்கை யைப் பொறுத்தவரை வழமையான பூகோள காலக்கிரம மீளாய்வு மூலம் எட்டப்பட முடி யாதவை என்று கருதியே இந் தத் தீர்மானம் இங்கு கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. தங்களுக்கு எதிராக இன வழிப்புக் குற்றம் புரியப்பட்டிருப்பதாக விசேடமாகத் தமிழர் கருதும் நிலையில்இலங்கையில் நின்று நிலைக் கக் கூடிய உண்மையான நல்லிணக்கம் ஏற்படுவதற்கு நிலை மாறுகால நீதியும், மிக முக்கியமாக குற்றப் பொறுப்புக் கூறலும், மிகவும் அடிப்படையானவை என்பது தெளிவானது. ஆனால், இலங்கை ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலுடன் தொடர்பாடலை வெளிப் படுத்துவது வெறும் பொது நல்லுறவு தொடர்பான நடிப் பேயன்றி, பொறுப்புக் கூறல் சம்பந்தமான தனது கடப்பாட்டை நடைமுறைப்படுத்தும் நோக்கம் கொண்டல்ல என்பது இன்று இங்கு மனித உரி மைகள் ஆணையாளர் அலுவலகத்தின் வாய் மூல விளக்கம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.

 HUMAN RIGHTS COUNCIL Delivered by:- Gajendrakumar Ponnambalam
37th Session
ITEM 2 – Oral Briefings - General Debate

Mr. President,
This statement is made in collaboration with the Tamil National People’s Front.
Since March 2012, a series of Sri Lanka country specific resolutions were adopted in the UNHRC that eventually culminated into resolutions 30/1 and 34/1, under which today, OHCHR had just made its latest oral briefing.

This series of Sri Lanka country specific resolutions were justified on the grounds that such action was needed to hold Sri Lanka accountable for the grave Human Rights and International Humanitarian Law violations that had taken place during the war, and because the importance of transitional justice and criminal accountability, as preconditions for reconciliation, could not sufficiently be captured through the UPR process alone.

Therefore it is clear that the need for transitional justice and criminal accountability in particular, are going to be the corner stones for a genuine and sustainable reconciliation to take place, especially when the Tamil people believe that the crime of Genocide has been committed against them. However, today OHCHR’s oral briefing on Sri Lanka makes it amply clear that the government is engaging with the UNHRC, merely as a public relations exercise and has done nothing in implementing its commitments towards accountability.

In this context we strongly welcome the OHCHR specifically calling on Member States to “explore other avenues” that could foster accountability. In this regards we would like to reiterate our position that, only a referral of Sri Lanka to the ICC, or the setting up of an ad hoc international criminal tribunal, will make criminal accountability in Sri Lanka a reality.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.