திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் விபத்து - ஒருவர் பலி!

திருகோணமலை - கண்டி பிரதான வீதியில், சீனன்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விலாங்குளம் பிரதேசத்தில் 5 ஆம் கட்டை எனும் இடத்தில் நேற்று (27) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இரு பிள்ளைகளின் தந்தையான ஜெயசிங்க ஆராச்சிகே சமீர ஜெயசிங்க எனும் 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சீனன்குடா பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் தமது வீட்டில் இருந்து வெளியே சென்றவர் எதிரே வந்த வேனுடன் மோதியதாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்தார். 

வேனின் சாரதி சீனன்குடா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 
Powered by Blogger.