சீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி தொடர்ந்தும் விளக்கமறியலில் !

சீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

அவரை எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீவான் லால் ரணசிங்க உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார். 

அவரை பிணையில் விடுவக்க அவர் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் கோரியிருந்த போதிலும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

அதன்படி அவருக்கான பிணை நிராகரிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

சீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி, 25,000 ரூபா பணம் மற்றும் மதுபான போத்தல் ஒன்றையும் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கடந்த 13ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.